மது போதையில் மனைவியை குத்த சென்ற நபர் கால் தவறியதால் பாட்டிலால் உயிரிழப்பு

தவறி விழுந்ததால் பாட்டில் குத்தி இறந்த வெங்கடேசனின் சடலம் (உள்படம்) வெங்கடேசன்.
Man Dead By Liquor Bottle
திருவள்ளூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலை உடைத்து மனைவியை குத்த சென்ற கணவர் கால் தடுமாறி கீழே விழுந்த போது அவருடைய கழுத்தில் மது பாட்டில் குத்தியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
திருவள்ளூர் நகர காவல் நிலையம் அருகே உள்ள கிழக்கு குளக்கரை தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான வெங்கடேசன்( வயது 44).இவரது மனைவி புவனேஸ்வரி ( வயது 40).இவர்களுக்கு நவீன்குமார், ( வயது 22), லோகேஷ் ( வயது 20).என்ற 2 மகன்கள் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டில் குடும்பத்தாருடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்த உடனே மது அருந்தி உள்ளார்
இதனை மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து மனைவியை குத்துவதற்காகமுயன்ற போது மது போதையில் இருந்த வெங்கடேசன் கால் தவறி கீழே விழுந்தவர் தான் கையில் வைத்திருந்த பாட்டில் கழுத்துப் பகுதியில் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்,
இது குறித்த தகவல் அறிந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிம ருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu