மின் கோபுரத்தில் தூக்கிட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு!

மின் கோபுரத்தில் தூக்கிட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு!
X

உயிரிழந்த தினேஷ்.

திருவள்ளூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்தில் தூக்கிட்ட நிலையில் வாலிபர் சரளத்தில் போலீசார் மீட்டனர்.

திருவள்ளூர் அருகே உயர் அழுத்தமின் கோபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு அழுகிய நிலையில் சடலமாக இருந்தவரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் வைஷாலி நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது-26) இவர் கடந்த 16,ஆம் தேதி மதியம் 1 மணி அளவில் வீட்டிலிருந்து தன்னுடைய நண்பரிடம் பணம் வாங்கி வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் இரவு வரை கணவரை வீடு திரும்பவில்லை என்றும் பல இடங்களில் தேடியும் காணாத நிலையில் சந்தேகம் அடைந்த தினேஷ் மனைவி சூர்யா, கடம்பத்தூர் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் 16 தேதி மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன தினேஷை,தேடி வந்துள்ளனர். இந்நிலையில் 21, தேதி அன்று செஞ்சி பானப்பாக்கம் ஏரி பகுதியில் மின் அழுத்த கோபுரத்தில் தூக்கிட்டவாறு ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருப்பதாக அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த‌ காவல்துறையினர் சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் மர்மமான முறையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

26.வயதான இளம் வாலிபர் மின் கோபுரத்தில் தூக்கிட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!