சிவராத்திரியையொட்டி பள்ளி கொண்டீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

மஹா சிவராத்திரியையொட்டி நடந்த சுவாமி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Mahasivarathiri Special Pooja
ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளியில் மகா சிவராத்திரி முன்னிட்டு பிரசித்தி பெற்ற சர்வ மங்களா சமேத ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் ஆலயத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவர் காமதேனு வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தமிழக-ஆந்திர எல்லையான சுருட்டப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சர்வ மங்கள சமேத ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் மற்றும் பிரதோஷைத்தை முன்னிட்டு அதிகாலை முதல் சர்வ மங்களாதேவிக்கும் பள்ளி கொண்டீஸ்வரருக்கும் பால்,தயிர்,சந்தனம், இளநீர்,பன்னீர்,தேன், ஜவ்வாது, திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களாலும், அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Mahasivarathiri Special Pooja
பிரதோஷம் நாள் என்பதால் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் மட்டுமல்லாது தமிழகம்,தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோயில் முழுவதும் வண்ண மலர்களாலும்,பழ வகைகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் மத்தியில் கண்ணைக் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து உற்சவர் சிவபெருமான் பார்வதி தேவியுடன் காமதேனு வாகனத்தில் கோயிலை சுற்றி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. அதிகாலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu