கன்னிகைபேர் கிராமத்தில் திருவரங்க செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

கன்னிகைபேர் கிராமத்தில் திருவரங்க செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
X

திருவள்ளூர் மாவட்டம் செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டமட் கன்னிகைபேர் கிராமத்தில் திருவரங்க செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் கிராமத்தில் சுமார் 150 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திருவரங்க செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 12. ஆண்டுகளுக்கு நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதியன்று கன்னிகைபேர் காலை மகா கணபதி பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம் கோபூஜை யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்றது. கடைசி நாளான இன்று காலை சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் புரோகிதர்கள் நான்காம் கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாஹுதி யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகள் செய்து வைத்தனர். பின்னர் கலச புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனையடுத்து காலை 9.15 மணி அளவில் யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கொண்டு கோவில் மீதுள்ள கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதனையடுத்து திருவரங்க செல்லியம்மன், செல்லியம்மன், எல்லையம்மன், ஸ்ரீ கன்னிமார்கள், பரிவார தெய்வங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு செல்லியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், 108 குங்குமார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்த பின்னர் மகா தூப தீபாராதனை காண்பிக்கப்பட்டது அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் விழாக்குழுவினர் மற்றும் கன்னிகைபேர் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!