திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப திருவிழா இன்று தொடக்கம்

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் தெப்பம் அலங்கரிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெகு விமர்சையாக தெப்ப திருவிழா நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான மாசி மாத தெப்பத் திரவிழா இன்று (திங்கள்கிழமை ) இரவு தொடங்குகிறது.
இந்த மாசி மாத தெப்ப திருவிழா வருகின்ற 22 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மாசி மாத திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் வைத்திய வீரராகவர் சிறப்பு கோலங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்த நிலையில் வீரராகவ பெருமாள் கோவில் அருகே உள்ள குளத்தில் தண்ணீர் மாற்றப்பட்டு அதில் தெப்பத்தை உருவாக்கி தெப்பத்திற்கு வண்ண மலர்களாலும் வண்ண மின் விளக்ககளாலும் அலங்காரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தெப்பத்தில் உலா வர இருப்பதால் ஆலயத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் திருவள்ளூர் சுற்றியுள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை, பெரியபாளையம், ஆவடி, திருநின்றவூர், பூந்தமல்லி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தெப்ப தெருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள் என ஆலயத்தின் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu