ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்: 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்: 3 பேர் கைது
X

பைல் படம்

ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கடத்திய 1.5 டன் செம்மரக் கட்டைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே கொடிவல்லி பகுதியில் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திரா பதிவு எண் கொண்ட சொகுசு கார் சென்னை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த போது, அந்த காரை பின் தொடர்ந்து தமிழக பதிவு எண் கொண்ட மற்றொரு கார் சென்றதால் சந்தேகம் அடைந்த போலீசார் திடீர் திருத்தணி சோதனைச் சாவடியில் கார் சீட்டுக்கு அடியில் 1.5டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து சொகுசு கார்களுடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் திருத்தணி அருகே அலமேலுமங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மகன் உமாபதி (47), ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த ரத்தினம் (45), அனிஷாஷ் (45) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்ததில் திருப்பதியை அடுத்த வெங்கடகிரி பகுதியில் இருந்து சென்னைக்கு கடத்தப்படுவதாக தெரியவந்தது. தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!