அறக்கட்டளையின் சார்பில் பழங்குடி இன மக்களுக்கு மதிய உணவு!
திருக்கண்டலம் ஊராட்சியில் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை சார்பில் திருக்கண்டலம் ஊராட்சியில் 1200 பேருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் சுமார் 1200.மேற்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சிலர் வேலை இல்லா திண்டாட்டத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய குடிமக்கள் சமூக மக்கள் நல் அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அறக்கட்டளையின் தேசிய செயலாளர் பிரியா, நளினி மாயா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருக்கண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் கலந்துகொண்டு உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இதில் அறக்கட்டளையின் கமிட்டி குழு செயலாளர் ராஜகோபால், ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜேந்திரன், துணைத் தலைவர் கார்த்திக் செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், செயற்குழு துணைச் செயலாளர் திவாகர், மகளிர் அணி தலைவி கௌரி, துணைத் தலைவி குமுதா, ஒருங்கிணைப்பாளர் பிரபு, துணை ஒருங்கிணைப்பாளர் சந்துரு அறக்கட்டளை உதவியாளர் நரேஷ், கமிட்டி குழு தலைவர் ஆர்த்தி ராஜ், உறுப்பினர்கள் பிரசாத், சாந்தி,குமரன்,கஸ்தூரி, தேவராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னதாக ஊராட்சி மன்ற தலைவருக்கு பொன்னாடை மாலை அணிவித்து கௌரவப்படுத்தினார். உங்களுக்கு உணவு வழங்கிய அறக்கட்டளையின் தலைவருக்கும் நிர்வாகிகளுக்கும் பகுதி மக்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu