தண்டவாளத்தை கடக்கும்போது பழுதாகி நின்ற லாரி : போக்குவரத்து பாதிப்பு

தண்டவாளத்தில் பழுதாகி நின்ற லாரி
திருவள்ளுர் அருகே இன்று காலை ரயில்வே கேட் வழியாகதண்டவாளத்தை கடந்து சென்ற லாரி திடீரென பழுதாகி நின்றதால் சென்னை அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு -திருநின்றவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை சுமார் 10 மணி அளவில்சென்னை திருவள்ளூர் சிடிஎச் சாலை வழியாகவந்த கனரக லாரி ஒன்று வேப்பம்பட்டு ரயில்வே கேட் பகுதியை கடக்க முயன்ற போது தண்டவாளத்தின் இடையே பின் சக்கர டயரில் ஏற்பட்டபிரச்சனை காரணமாக பழுதாகி நின்றது.
இது குறித்த தகவல் உடனடியாக கேட் கீப்பர் மூலம் திருவள்ளூர் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .இதனை அடுத்து சென்னை -அரக்கோணம், அரக்கோணம் - சென்னை ஆகிய இரு மார்க்கங்களில் வந்து கொண்டிருந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் பெரும் பரபரப்பு நிலவியது பின்னர் தண்டவாளத்தின் இடையே சிக்கிக் கிடந்த லாரியை ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுமார் அரை மணிநேர போராட்டத்திற்குப் பிறகு அப்புறப்படுத்தினார்கள்
பின்னர் வழக்கம்போல் ரயில்கள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேர காலதாமதத்திற்கு பின்வழக்கம்போல் இயக்கப்பட்டன. இது குறித்து திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu