/* */

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத லாரி ஓட்டுநர் கொலை: நண்பன் கைது

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத லாரி ஓட்டுநரை கொலை செய்த நண்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத லாரி ஓட்டுநர் கொலை: நண்பன் கைது
X

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான பிரகாஷும் 28, கன்னிகைபேர் அருகே தர்மபுரம் கண்டிகையை சேர்ந்த சக லாரி டிரைவரான சூர்யாவும், நண்பர்களாக இருந்து வந்தனர்.

நேற்று காலை பெரியபாளையம் அடுத்த அக்கரப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சவுடு மண் குவாரியில் சவுடு மண் ஏற்றுவதற்காக இருவரும் தங்களது லாரிகளில் சென்றுள்ளனர். குவாரி அலுவலகத்தில் ரசீது வாங்குவதற்காக காத்திருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சூர்யா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரகாஷை சரமாரியாக வெட்டி விட்டு லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்று விட்டார். பிரகாஷ் வெட்டுக்காயத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநர் பிரகாஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சக டிரைவரை கொலை செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் சூர்யாவை தேடி வந்தனர்.

தீவிர விசாரணையில் சோழவரம் அருகே சோலையம்மன் நகரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை பெரியபாளையம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிரகாஷ் தன்னுடைய தேவைக்காக சூர்யாவிடம் அரை சவரன் நகையை வாங்கி அடகு வைத்ததாகவும் சுமார் 2ஆண்டுகளாகியும் அதனை மீட்டு திருப்பி தராததால் இது தொடர்பாக சூர்யாவிற்கும் பிரகாஷிற்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

மேலும் நகையை திருப்பி கொடுக்காத பிரகாஷ் சூர்யாவையும் அவரது குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், நேற்று குவாரியில் சந்தித்த போதும் திட்டியதால் ஆத்திரத்தில் பிரகாஷை மிரட்டுவதற்காக கத்தியால் வெட்டியதாகவும், தலையில் பலமாக வெட்டு பட்டு பிரகாஷ் உயிரிழந்துவிட்டதாக சூர்யா காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து சூர்யாவை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பெரியபாளையம் காவல்துறையினர் பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் நண்பனை கொலை செய்து விட்டு தப்பியோடி தலைமறைவான கொலையாளியை 24மணி நேரத்தில் கைது செய்த பெரியபாளையம் காவல்துறையினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Updated On: 27 May 2023 2:30 AM GMT

Related News