காவல்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான தங்க நகை கொள்ளை

காவல்சேரியில்  வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான தங்க நகை கொள்ளை
X
பைல் படம்
காவல்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ 6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த காவல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (60). இவர் தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

மீண்டும் நேற்று மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் நகைகள் மற்றும் பைல்கள், துணி ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஷோபா தேவி சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்