மூன்று ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் 82 பனம்பாக்கம் ஊராட்சி நூலக கட்டிடம்.

மூன்று ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் 82 பனம்பாக்கம் ஊராட்சி நூலக கட்டிடம்.
X

மூன்றாண்டுகளாக பூட்டிக்கிடக்கும் நூலகம் 

மூன்று ஆண்டுகளாக மூடி கிடக்கும் 82 பனப்பாக்கம் நூலகத்திற்கு அமைத்து நாள்தோறும் நூலகத்தை திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை.

மூன்று ஆண்டுகளாக மூடி கிடக்கும் 82 பனப்பாக்கம் நூலக கட்டிடம் பல நூறு புத்தகங்கள் வீணாகும் அவலம் நூலகரை அமைத்து நாள்தோறும் நூலகத்தை திறக்க வேண்டும் என படித்த இளைஞர்கள் கிராம பொதுமக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த 82 பனப்பாக்கம் கிராமத்தில் சுமார் 4000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலக கட்டடம் ஒன்று செயல்பட்டு வந்தது

இந்த நூலகத்தில் ஆய்வு சார்ந்த புத்தகங்கள், பொழுதுபோக்கு புத்தகங்கள், நாளிதழ்கள், வரலாறு நிகழ்வுகள், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள நாள்தோறும் இப்பகுதியில் உள்ள முதியோர்கள் படித்து முடித்த பட்டம் பெற்ற இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் நாள்தோறும் வந்து படித்து பயன்பெற்று வந்தனர்.

இந்த நிலையில் இந்த கிராமப்புற நூலகம் பகுதி மக்களுக்கு பெரும் பங்காற்றி வந்த நிலையில் தற்போது இந்த நூலகத்தில் நூலகர் இல்லாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது. இந்த பகுதி மக்கள், இளைஞர்கள் புத்தகங்களை படிக்க முடியாமல் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெரியபாளையம் நூலகத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் நூலக கட்டிடம் வேண்டுமென பகுதி மக்கள் போராடிக் கொண்டு வந்த இந்த கிராமப்புற நூலகத்திற்கு நூலகர் ஒருவரை பணியில் நியமித்து நாளிதழ்களை வர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படித்து முடித்து இளைஞர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கிராம பொதுமக்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், தாங்கள் பகுதியில் உள்ள நூலக கட்டிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ஆண்டு காலமாக நூலக கட்டிடத்தை திறக்காமல் மூடி கிடப்பதால் அதில் உள்ள நூற்றுக்கணக்கான அறிவு சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு புத்தகங்கள் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போதாவது இந்த கட்டிடத்திற்கு நூலகர் ஒருவரை பணியில் நியமித்து நாள்தோறும் நூலகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கோரிக்கை ஏற்று இதன் நூலக கட்டிடம் திறக்கப்படுமா?.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!