சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை
X

சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

Vehicle Seized -சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Vehicle Seized -பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு பிடிப்படும் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரியபாளையம் காவல் நிலையத்தில் போதிய இடம் இல்லாத காரணத்தினால் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் விபத்துக்கள் நடைபெறும் அபாயம் உள்ளதால், அங்கிருந்து வாகனங்களை அகற்ற பெரியபாளையம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல், போதை பொருள் கடத்தல், செம்மரம் கடத்தல், விபத்துகள் உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஈடுபடுத்தப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லாரி, ஜேசிபி, வேன், ஜீப்,கார், மாட்டு வண்டிகள், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் என பெரியபாளையம் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் காவல் நிலையம் முன்பு, காவல் குடியிருப்பு பின்புறமும், காவல் குடியிருப்பு முன்பு , பெரியபாளையம் ஆரணி செல்லும் சாலை ஓரத்தில் என பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

அந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் அவ்வழியாக செல்லும் இரு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மீது மோதி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. மேலும் அதன் அருகிலேயே மதுவிலக்கு போலீசாரால் மது கடத்தலில் ஈடுபடுத்தப்படும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் சாலையோரமே நிறுத்தி வைக்கப்படுகின்றன

இதுகுறித்து வாகன ஓட்டுகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கையில், காவல்துறையினரால் பல குற்ற சம்பவங்களில் பிடிபட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இது போன்று சாலை ஓரங்களில் நிறுத்துவதால், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை முறையாக ஏலம் விட வேண்டும். இது மட்டுமல்லாமல் காவலர் குடியிருப்பு பகுதியின் பின்புறம் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழையில் நனைந்து துருப்பிடித்து, செடி கொடிகள் வளர்ந்துள்ளன

புதர் போன்ற அந்த பகுதியில், விஷப் பாம்புகளும் சேர்ந்து விடுவதால், இரவு நேரங்களில் அதிலிருந்து பாம்புகள், பூச்சிகள் என வெளியேறி அருகில் இருக்கும் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. காவல் நிலையம் முன்பு இருசக்கர ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தர்மராஜா கோவில் தெரு பகுதிக்கு உள்ளே செல்லும் சாலையை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளுக்குள் உள்ளே செல்லும் வேன் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது.

எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட பெரியபாளையம் காவல்துறையினர் கண்டுகொண்டு வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!