பழுதடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து தந்து ஊராட்சி தலைவிக்கு பாராட்டு
நூலக கட்டிடம் சீரமைக்கப்பட்டதை ஊராட்சி தலைவி பார்வையிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழச்சேரி ஊராட்சியில் செயல் பட்டுவந்த நூலகம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் நூலகம் மூடப்பட்டன. இதனால் புத்தக வாசிப்பாளர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் நூலகத்தை புதுப்பிக்கக்கோரி கிராமமக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவி தேவிகலா ஆரோக்கியசாமி முயற்சியால் இந்த நூலகத்தை புதுப்பொலிவுடன் புனரமைக்கவும், கட்டிட அமைப்பில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.2, லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற தலைவி தேவகலா ஆரோக்கியசாமி தலைமையில் நூலகத்தை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. நூலகத்தின் உள்கட்டமைப்பை மீண்டும் புதுப்பொலிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் பழுதடைந்த சுவர்கள், இருக்கைகள், குடிநீர் குழாய்கள், கழிவறைகள் என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவி முயற்சியால் நூலக கட்டிடம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் கிராமமக்கள் ஊராட்சி மன்ற தலைவி தேவிகலா ஆரோக்கியசாமியை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது உடன் ஊராட்சி வளர்ச்சி குழு மற்றும் கல்விக்குழு தலைவர் ஆ.தேவா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பி.எஸ்.சந்தோஷ்ராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள். அது உட்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu