வடமாநில இளைஞர்களை தாக்கி எல்இடி டிவி, ஹோம் தியேட்டர் பொருட்கள் வழிப்பறி: இருவர் கைது

கைது செய்யப்பட்ட இருவர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சதாம் (31),லூசுமா,ஆகியோர் திருவள்ளூர் பகுதியில் தங்கி குறைந்த விலையில் டிவி, ஹோம் தியேட்டர், உள்ளிட்ட வீடு உபயோக பொருடகளை ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருவள்ளூர், ஆரணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊத்துக்கோட்டை அடுத்த .பனப்பாக்கம் கிராம பகுதி நோக்கி இருசக்கர வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை (எ) ஜெனி ராஜ்(30), மற்றும் அரக்கோணம் பகுதியை சார்ந்த அப்துல் ரகுமான்(30) ஆகிய இரண்டு பேர் வட மாநில இளைஞர்களை
தாக்கி விட்டு அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த எல்இடி டிவி, ஹோம் தியேட்டர் பொருட்களை வழிப்பறி செய்து அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வடமாநில இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட ராஜதுரை, அப்துல் ரகுமான் ஆகிய இருவரை மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து எல்இடி டிவி, ஹோம் தியேட்டர் பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது வடக்கு பதிவு செய்த பெரியபாளையம் போலீசார் ஊத்துக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu