அதலபாதாளத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு: தி.மு.க. ஆட்சி பற்றி அண்ணாமலை

அதலபாதாளத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு: தி.மு.க. ஆட்சி பற்றி அண்ணாமலை
X

திருவள்ளூர் என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசிய காட்சி.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் உள்ளது என திருவள்ளூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் உள்ளது. சமூக நீதி பாதுகாப்பு படு தோல்வி அடைந்துள்ளது என திருவள்ளூரில் யாத்திரை நிகழ்ச்சிக்கு பின் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறினார்.

என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலைக்கு திருவள்ளூர் சி.வி.என். சாலையில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டந்தோறும் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 190 வது தொகுதியாகயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 191-வது தொகுதியாக திருவள்ளூருக்கு வந்த அவருக்கு சிவிஎன் சாலையில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து காமராஜர் சிலை வழியாக,ஜே.என்.சாலை, ராஜாஜி சாலை, தேரடி சாலை, பஜார் வீதி வரை யாத்திரையாக சென்ற அண்ணாமலைக்கு சாலையின் இருபுறமும் கூடியிருந்த பாஜக வினர் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

யாத்திரை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-

கடந்த 67 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மருத்துவ படிப்புக்கான இடம் 57 ஆயிரத்திருந்து 1 லட்சத்து 8 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.நடைபெற உளள தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி ஆட்சியில் அமருவார். இந்தியாவில் மு.க.ஸ்டாலின் பகுதி நேர முதலமைச்சர். கேட்க வேண்டிய கேள்வி மற்றும் பேச வேண்டிய விசயத்தையும் துண்டு சீட்டில் முதல்வர் பார்த்து படிக்கிறார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் உள்ளது. சமூக நீதி பாதுகாப்பு படுதோல்வி அடைந்துள்ளது. டிஆர் பாலு எம்பி பேசியது குறித்து கேட்கிறார்கள். திமுக சாதி அரசியல் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநில துணைத் தலைவர் நல்லாட்டூர் எம்.சக்கரவர்த்தி, மாவட்ட தலைவர் எம்.அஸ்வின் என்கிற ராஜசிம்ம மகேந்திரா, டாக்டர் ஸ்ரீ கிரண், பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோஜ் பி.செல்வா, நலத்திட்ட பிரிவு மாநில தலைவர் ஜெ.லோகநாதன், மாநில ஓபிசி அணி செயலாளர் ஏ.ராஜ்குமார், மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கீதாஞ்சலி சம்பத், மாவட்ட நிர்வாகிகள் முல்லை ஞானம், கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் லயன் எம்.பன்னீர்செல்வம், சி.பி.ரமேஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ், விஎஸ்டி.சந்தோஷ்குமார், நகரத் துணைத் தலைவர் வி.சத்தியநாராயணன், ஒன்றிய செயலாளர் இ.ராஜசேகர், நகர பொது செயலாளர் எஸ்.பிரசாந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!