பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்
X

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் தண்ணீரீல் மூழ்கியதால் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுப்பாளையம் தரைப்பாலம் தண்ணீல் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பெரியபாளையம் அருகே கனமழை காரணமாக ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுப்பாளையம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதைத் தொடர்ந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கனமழை காரணமாக ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுப்பாளையம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆரணியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில் அருகே புதுப்பாளையம்- காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.இதே போல மங்களம் கிராமத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த மண் பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக காரணி,நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10.க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக 10.கிமீ சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து பகுதி மக்கள் தெரிவிக்கையில் கடந்த ஆண்டு இதேபோல் ஆற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அன்றைய பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அன்றைய மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு விரைவில் ₹.20கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்த நிலையில் இதுவரை இப்பணிகளுக்கான எவ்வித பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business