ஊத்துக்கோட்டை அருகே மின்னல் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே மின்னல் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு
X

மின்னல் தாக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி ஆனந்தராஜ்.

ஊத்துக்கோட்டை அருகே வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளி மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்துக்கோட்டை அருகே வயல்வெளியில் பணியாற்றி வந்த கூலி தொழிலாளி மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தொளவேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சசிகுமாருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்பயிர் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றார்.

இந்நிலையில் தனக்கு சொந்தமான வயல்வெளியில் வயல்வெளி வேறப்பில் அண்டை வெட்டும் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் நேற்றைய மாலை தினம் பணியாற்றி வந்துள்ளனர்.

அப்போது மதியம் இரண்டு மணி அளவில் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழையானது பெய்துள்ளது.

அப்போது மழை வருவதால் தொழிலாளி ஆனந்தராஜ் ( வயது 45) தவிர்த்து அனைத்து கூலி தொழிலாளர்களும் அருகில் மறைவான இடத்தில் ஒதுங்குவதற்காக சென்றுள்ளனர்.

ஆனால் கூலி தொழிலாளி ஆனந்தராஜ் தாமதமாக சக தொழிலாளிகள் ஒதுங்கிய இடத்திற்கு வருவதற்காக வந்தபோது அவர் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே ஆனந்தராஜ் துடித்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் அவர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி விவசாயி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!