கும்மிடிப்பூண்டி பேரூர் தி.மு.க. இளைஞரணி சார்பில் கையெழுத்து இயக்கம்

கும்மிடிப்பூண்டி பேரூர் தி.மு.க. இளைஞரணி சார்பில் கையெழுத்து இயக்கம்
X

கும்மிடிப்பூண்டி பேரூர் தி.மு.க. இளைஞர் அணி சார்பாக நீட்தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பேரூர் தி.மு.க. இளைஞரணி சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் பேரூர் இளைஞர் அணி சார்பில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை நகர செயலாளர் அறிவழகன் தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி நகர தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் சாண்டில்யன் ஏற்பாட்டில் நீட் விலக்கை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மற்றும் இணைய வழியில் நீட் தேர்வு எதிர்ப்பு இயக்க நிகழ்வும் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி நகர திமுக செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார்.

இந்த நீட் விலக்கு கையெழுத்து இயக்க நிகழ்விற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன்பாபு, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், தி.மு.க. நிர்வாகி ரமேஷ்,மனோகரன் பேரூராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன், காளிதாஸ், அப்துல் கறீம், விமலா அர்ச்சுனன் கிளை செயலாளர் ராஜா, குப்பன், முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நிகழ்வில் 400.க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி பதாகையில் கையொப்பம் இட்டும்,நீட்தேர்வு விலக்கு தபால் அஞ்சல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெட்டியில் போட்டும், இணைய வழியில் நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தியும் நீட்தேர்வை விலக்க வலியுறுத்தினர்.இந்த நிகழ்வில் தி.மு.க. விளையாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பரத்குமார், பேரூர் இலக்கிய அணி துணை அமைப்பாளர் தசரதன், நகர இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி நிர்வாகி சிவா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business