திருவள்ளூர் அருகே சேமாத்தம்மன் மந்தவெளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் அருகே சேமாத்தம்மன் மந்தவெளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

திருவள்ளூர் அருகே சேமாத்தம்மன் மந்தவெளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே பழமை வாய்ந்த சேமாத்தம்மன், மந்தவெளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் அடுத்த வயலூர் கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சேமாத்தம்மன் , மந்தவெளி அம்மன் மற்றும் விக்ன விநாயகர் உள்ளிட்ட 5 கோவில்களிலும் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த வயலூர் கிராமத்தில்1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேமாத்தம்மன் மந்தவெளி அம்மன் மற்றும் விக்ன விநாயகர், பீமேஸ்வரர் சொர்ணாம்பிகை, நவகிரக உள்ளிட்ட ஐந்து கோவில்களும் புதிதாக புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அனைத்து கோயில்களும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கோவில் புதுப்பிக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் ஐந்து கோயில்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மாதம் வியாழக்கிழமை 27 ந் தேதி தொடங்கியது.

சேமாத்தம்மன் கோவில் வளாகத்தில் 33 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து லட்சுமி பூஜை, கோமாதா பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணா தகுதி துபாய் நைவேத்தியம் ஆராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவான இன்று காலை ஆறு கால யாக கால பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர் 9.30 மணிக்கு பட்டாச்சாரர்கள் யாக சாலையிலிருந்து புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் ஒரே நேரத்தில் ௫ கோவில்களின் கோபுர விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.


கோவில் கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யும் முன்பாக வானத்தில் 5 கருடன்கள் வானத்தில் வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்து கோவிந்தா, கோவிந்தா என விண்ணைப் பிளக்கும் விதமாக கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர்களுக்கு பால், சந்தனம், தேன், தயிர், ஜவ்வாது, குங்குமம், மஞ்சள், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களாலும், பட்டு உடைகளால், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் வயலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கும்பாபிஷேகத்தை கண்டு களித்து வழிபட்டனர்.விழாவையொட்டி பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

ஐந்து கோவில்களும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்த போது ஐந்து கருடன்கள் வானத்தில் வட்டமிட்டு ஆசி வழங்கியது பக்தர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
why is ai important to the future