முக்கராம்பாக்கம் கிராம தேவதை செல்லியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

முக்கராம்பாக்கம் கிராம தேவதை செல்லியம்மன் ஆலயத்தில்   கும்பாபிஷேகம்
X

முக்கரம்பாக்கம் கிராமத்தில்.100 ஆண்டுகளுக்குப் பிறகு பழமை வாய்ந்த கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா

100 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லியம்மன், திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது

முக்காரம்பாக்கம் கிராமத்தில்.100 ஆண்டுகளுக்குப் பிறகு பழமை வாய்ந்த கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள முக்காரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 1925.ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதனை அடுத்து கிராம மக்களின் பங்களிப்புடன் கோவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது விழாவை முன்னிட்டு நான்காம் காலை பூஜைகளான கணபதி ஹோமம், விசேஷத் தீரவிய ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடந்த முடிந்தது. பின்னர் கே.ஆர். காமேஸ்வரர் குருக்கள் தலைமையில் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கலசங்களை புரோகிதர்கள் தலையில் சுமந்து மேள தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வளம் வந்து10.மணி அளவில் விமான கோபுர கலசங்களுக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனர். குடமுழுக்கைக்காண வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதனை அடுத்து மூலவர்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் செய்த பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முக்காரம்பாக்கம் கிராம மக்கள் செய்திருந்தனர்..


Tags

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil