திருவள்ளூர் அருகே பணி ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் தலைமையில்பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி அரசினர்மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை சிறப்பான முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஜம்பு பணிநிறைவு பெறுவதை முன்னிட்டு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு, மற்றும் மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியருக்கு மாலை அணிவித்தும், பரிசுப் பொருட்கள், மற்றும் கேடயங்கள் வழங்கியும் பாராட்டு விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை ஆசிரியர் கூறுகையில் 2019 ஆம் ஆண்டில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றதாகவும் அப்பொழுது திருவள்ளூர் மாவட்டத்தில் 100 பள்ளிகள் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பின் தங்கியுள்ள பட்டியலில் பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியும் அதில் சார்ந்ததாகவும் இந்நிலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று என்னோடு சேர்ந்து அனைத்து ஆசிரியர்களும் கடுமையாக 202-2023 ஆண்டில் உழைத்தால் 97 % விழுக்காடாக மாணவர்களின் தேர்ச்சி கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்,மேலும் மாலை வேளையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும், பூண்டி பகுதியில் ஏழு மணிக்குள் பேருந்து சேவைகள் அப்பகுதியில் துண்டிக்கப்படுவதாகவும் அதனால் தொலைதூரத்தில் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் இந்த சிறப்பு வகுப்பில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும்,
எனவே தமிழக அரசு மாணவர்களின் நலனை கருதி பூண்டி பகுதிக்கு இரவு 8 மணி வரை பேருந்துகள் இயக்கப்பட்டால் அனைத்து மாணவர்களும் சிறப்பு வகுப்பில் பங்கு பெற்று100% தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, ரமேஷ்,பூண்டி ஒன்றியகுழு உறுப்பினர் விஜயன், வி.சி.க. ஒன்றிய செயலாளர் ராஜா, மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஞானசேகர்,முரளிதரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடைய பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu