காக்களூரில் பளு தூக்கும் போட்டியை துவக்கி வைத்தார் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ

கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பளுதூக்கும் போட்டியை துவக்கி வைத்தார்.
Weight Lifting Exercises - மறைந்த முன்னாள் முதல்வர்கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட அளவிலான சப் ஜூனியர், சீனியர், ஜூனியர் ஆண்கள் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி காக்களூர் பகுதியில் திருவள்ளூர் மேற்கு தி.மு.க. ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விளையாட்டை துவக்கி வைத்து போட்டியாளர்களுக்கு கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக காக்களூர் துணை மின் நிலையம் மூலம் காக்களூர் தொழிற்பேட்டை, தண்ணீர் குளம், செவ்வாப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் ஆகியவற்றிற்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனால் காக்களூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும், தொழிற்சாலைகளில் மின்சாரம் செயல்படாமல் போவதால் உற்பத்தி பாதிப்படைவதாகவும், வீடுகளிலும் பல்பு, மின்விசிறி ஆகியவறை சரியாக செயல்படாமல் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இப் பிரச்சனை போக்கும் வண்ணத்தில் காக்களூர் துணை மின்நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் பிரேக்கர் சக்தி நகரில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய மின்மாற்றியை அமைத்து அதனையும் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.பார்க்கத்துல்லாகான், செயற்பொறியாளர் கனராஜன் ஒன்றிய கவுன்சிலர்கள் த.எத்திராஜ், டி.கே.பூவண்ணன், மின்வாரிய அதிகாரிகள் ஜானகிராமன், என்.பாலாஜி, ஏ.தட்சிணாமூர்த்தி நிர்வாகிகள் எஸ்.என்.குமார், டி.சுகுமார், கே.கே.சொக்கலிங்கம், கே.தரணி, சாமுண்டீஸ்வரி சண்முகம், டி.கே.சீனிவாசன், டி.எம்.ராமச்சந்திரன், பி.பரமேஸ்வரன், டி.தயாளன், மற்றும் ஒலிம்பியன் இ.கருணாகரன், பி.மதுரை வீரன், பி.அன்பு, வி.ஜெ.உமாகேஸ்வரன், ஆனந்தன், ஆர்.சண்முகம், பிரேம்குமார், பார்த்திபன், குமரவேல், சுமன், அமிர்தராஜ், பிரசாத், ராஜன், பூங்கொடி ராஜான்,தமிழ்செல்வன், அமுதன், அரவிந்தன், ஜி.சுகுமார், கரண், முத்தமிழன், கெளதம், சித்தார்தன், பி.எஸ்.சாரதி, சிவரஞ்சனி, கீர்த்தனா உள்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu