பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திற்கு வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்

பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திற்கு வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்
X

பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு  வந்து சேர்ந்த கிருஷ்ணா நதி நீர்.

கண்டலேறு அணையில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்தது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது. தண்ணீரில் குளிக்கவோ துணி துவைக்கவோ அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 19ஆம் தேதி தமிழகத்திற்கு முதல் கட்டமாக 500 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக 1300 கன அடியாக உயர்த்தப்பட்டு திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது நேற்று காலை 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை க்கு வந்தடைந்தது. இந்த கிருஷ்ணா நதிநீரில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், பொதுப்பணி நீர்வளத் துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்க்கு 150 கன அடியாக வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்று காலை 8 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்தது. மேலும் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு உயர்த்தப்படும் பட்சத்தில் நீர் வரத்தும் கணிசமாக உயிரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் இந்த தண்ணீரில் குளிக்கவோ துணி துவைக்கவோ அனுமதி இல்லை என்றும் அப்படி மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business