அறிவு சாரா நகரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி

knowledge-free city against Agitatiion பெரியபாளையம் அருகே மேல்மாளிகைபட்டு பகுதியில் அமைய உள்ள அறிவு சாரா நகரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

knowledge-free city against Agitatiion

பெரியபாளையம் அருகே அறிவுசார் நகரம் அமைப்பதற்கு விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு. விளை நிலங்களை கையகப்படுத்தினால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் என புகார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே சுமார் 1700 ஏக்கர் பரப்பளவில் ₹.200கோடி மதிப்பீட்டில் அறிவுசார் நகரம் அமைப்பதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

knowledge-free city against Agitatiion


இந்நிலையில் அறிவுசார் நகரம் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பெரியபாளையம் அருகே மேல்மாளிகைபட்டு கிராமத்தில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் முப்போகம் விளைய கூடிய விளை நிலங்களை அழித்து அறிவுசார் நகரம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளதாகவும், மேலும் விவசாய கூலி தொழிலை நம்பி வாழ்ந்து வருபவர்களுக்கும் முற்றிலுமாக வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாய நிலங்களை கைபியாகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்தில் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் எனவும் அரசு மறுபரிசீலனை செய்து திட்டத்தை கைவிடாவிட்டால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தனர். போராட்டத்தால் சிறிது நேரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story