கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் நகை பறிப்பு

கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் நகை பறிப்பு
X

குழந்தையிடம் நகை பறிக்கும் சிசிடிவி காட்சிகள்.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் விளையாடிக்கொண்டிருந்து குழந்தையின் நகை பின் ஒருவர் பறித்து செல்லும் வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது இந்த கோயிலில் அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருவதுண்டு. அதேபோல் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபாடு செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில் கோவிலில் அம்பாள் சன்னதி முன்பு பெண் ஒருவர் தனது சிறு குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டு இருந்துள்ளார். குழந்தை அங்கும் இங்குமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தையின் தாய் மற்றொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது குழந்தை அங்கிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. அப்போது அக்குழந்தையை கையில் பிளாஸ்டிக் பை வைத்துக் கொண்டு வந்த மர்ம பெண் ஒருவர் தூக்கிச் சென்று கோவிலுக்கு உள்ளே நுழைவுவாயிலில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் குழந்தை காணவில்லை என்று குழந்தையின் பெற்றோர் கோவில் முழுவதும் தேடிப் பார்த்தனர். அப்போது கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த மற்றொரு பெண் குழந்தை தனியாக இருப்பதைப் பார்த்ததும் தூக்கிக்கொண்டு வந்து பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர். குழந்தை கையில் அணிந்திருந்த மோதிரம் பிரேஸ்லெட் ஆகியவற்றை காணாமல்போனதை கண்டு தாய் அதிர்ச்சடைந்துள்ளார்.

இது தொடர்பாக கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மர்மப் பெண் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று கோவிலுக்குள் வைத்து கையில் இருந்த நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் குழந்தையிடம் நகைகளை கொள்ளை அடித்து விட்டு பக்தியுடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த மர்மப் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளிக்க பெண்ணிடம் கூறியபோது இந்த சம்பவம் என் கணவருக்கு தெரிந்தால் தன்னிடம் சண்டை போடுவார் என தெரிவித்து விட்டு அழுது கொண்டே குழந்தையை தூக்கிச் சென்றதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்