சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞர்களுக்கு 31 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞர்களுக்கு 31 ஆண்டு சிறை
X

டில்லிபாபு

திருவள்ளூரில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அடுத்த. கனகமாசத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காஞ்சிபாடி பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு தன் வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த டில்லிபாபு(30) என்ற இளைஞர் கத்தியை காட்டி கடத்தினார்.

இதனையடுத்து, பூந்தமல்லி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சிறுமியை 10 நாட்கள் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கனகம்மாசத்திரம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நிலையில், இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில் டில்லிபாபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கடத்திய குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தங்கும் விடுதியில் அடைத்து வைத்த குற்றத்துக்கு 1 ஆண்டு என மொத்தம் 31 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராத தொகையாக 11 ஆயிரமும் விதித்து நீதிபதி சுபத்ராதேவி உத்தரவிட்டார்.இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுப்பவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!