கேலோ இந்தியா இளைஞர் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டு
கேலோ இந்தியா போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவன் தனுஷிற்கு அவர் படித்த பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கேலோ இந்தியா போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மாணவனுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.அதன்படி இந்தியாவில் உள்ள பல மாநில விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்ற தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக தமிழக அணி தங்கம், வெள்ளி, வெண்கலம் என 97 பதக்கங்கள் பெற்று அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இதன் தொடர்ச்சியாக திருவள்ளூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான மூர்த்தி ராவ் பகதூர் கலவள கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் தனுஷ் என்ற( 17 வயது) மாணவன் 55 கிலோ எடை பிரிவில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து தங்கப் பதக்கம் வென்ற தனுஷ் இன்று பிற்பகல் 1 மணி அளவில் தனது குடும்பத்தாருடன் பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், பயிற்சியாளர் மோகனசுந்தரம், விளையாட்டு பிரிவு இயக்குனர் இளஞ்செழியன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளியின் மாணவர்கள் கை தட்டி உற்சாகமாக வாழ்த்தி வரவேற்றனர்.
பின்னர் பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தனுஷை தலைமை ஆசிரியர் தனது அறைக்கு அழைத்து பதக்கங்களை மாணவனுக்கு அணிவித்து மகிழ்ந்ததுடன் பாராட்டுகளை தெரிவித்தார்.கேலோ இந்தியா போட்டியில் வென்று பள்ளிக்கும் தமிழகத்திற்கும் கௌரவம் சேர்த்தது போல் ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் வாழ்த்தினார்.
அதே போல் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற தனுஷின் பயிற்சியாளர் கூறும் போது 45 கிலோ எடை பிரிவில் பங்கேற்று பதக்கங்களை வென்ற தனுஷ் தற்போது 55 கிலோ எடை விரைவில் பங்கேற்பதற்காக கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது எனவும் தற்பொழுது 55 கிலோ எடை பிரிவில் முதல் முறையாக போட்டியில் பங்கேற்ற தனுஷ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது எனக்கு கௌரவத்தை அளித்துள்ளது என பயிற்சியாளர் மோகனசுந்தரம் தெரிவித்தார்.
மாநில அளவில், தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை பெற்ற நான் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற தங்கப் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் எனமாணவன் தனுஷ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu