கருணாநிதி நூறாவது பிறந்த நாள்: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் ஆயிரம் கொடி கம்பம்

கருணாநிதி நூறாவது பிறந்த நாள்: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில்  ஆயிரம் கொடி கம்பம்
X

 திருத்தணி எஸ். சந்திரன் எம்.எல்.ஏ 

19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், 13 முறையும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் கருணாநிதி

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு புதிதாக ஆயிரம் கொடி கம்பம் வழங்கப்படும் என்று மாவட்ட கழக செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.

தமிழினத்தின் முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் கண்ட புத்துலக நாயகர், நூறாண்டு கண்ட திராவிடப்பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் 19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், 13 முறையும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியவர் கருணாநிதி.

19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், 13 முறையும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராகவும்,து பொது வாழ்வில் ஈடுபடுவோர் அனைவரும் பார்த்துப் படித்துப் பயிற்சி பெற்று பின்பற்ற வேண்டிய அரசியல் பண்பாட்டுப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் எண்ணிலா முற்போக்குச் சட்டங்களையும் முன்னோடித் திட்டங்களையும் நிறைவேற்றித் தந்து, அரசு நிர்வாக வரலாற்றில் நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் வளமும்,நலமும் ஏற்படுத்தும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியிருக்கிறார்.

பொதுப் போக்குவரத்து , இலவச நிலம் குடியிருப்பு மனைப்பட்டா உள்ளிட்ட நிலச் சீர்திருத்தம், கல்வி வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சி அடிப்படைக் கட்டமைப்பு விவசாயிகளின் நலனுக்காக முதன்முதலில் சட்டமன்றத்தில் நங்கவரம் பிரச்னை பற்றிய கன்னிப் பேச்சு தொடங்,கி முதலமைச்சர் பொறுப்பிலிருந்தபோது, அவர் விவசாயிகள்- வேளாண்மை முன்னேற்றத்திற்குக் கையெழுத்திட்ட மகத்தான திட்டங்கள் வரையில், தலைவர் கலைஞரின் பிரமிப்பூட்டும் சாதனைப் பட்டியலை எடுத்துரைப்பதற்கு ஏடுகள் போதாது.

கை ரிக்ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் அமைத்தது உள்ளிட்டவையும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கடைக்கோடி கிராமம் வரை மின் இணைப்புகள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு தன்னிறைவுத் திட்டங்களும், ஊராட்சிகள் தோறும் நூலகங்கள், சென்னையில் உலகத் தலைவர்கள் பார்த்து வியந்த சர்வதேசத் தரத்திலான ஆசியாவின் மிகப்பெரிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் கண்டவர்.

தமது ஆட்சிக் காலத்தில் கிராமங்களின் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கும் நகரங்களின் முழுமையான கட்டமைப்பு வசதிகளுக்கும் நிறைவேற்றியவர்திட்டங்களை தமிழகத்தில் முதன் முதலில், சட்டநாதன் கமிஷன் அமைத்துச் சமூக நீதிக்கு அசைக்க முடியாத அடித்தளம் ஏற்படுத்தி, தொடர்ந்து காலந்தோறும் உரிய பலன்கள் கிடைக்கச் செய்தவர்.

கல்வி - வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியின மக்களுக்கான இடஒதுக்கீடுகளை அளித்து, அவர்தம் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக இறுதி மூச்சு வரை அயராது பாடுபட்ட சமூகநீதிப் போராளியான கலைஞருக்கு புகழை போக்கும் வகையில் அவரது நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திருத்தணி திருவள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கு புதியதாக 1000 கொடி கம்பம் வழங்கப்படுமென திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!