காரனோடையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Karanodai Communist Agitation
காரனோடையில் நிறுத்தப்பட்ட பேருந்துகளின் சேவையை மீண்டும் தொடர வேண்டும், பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், டாஸ்மாக் கடையை மூடிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த காரனோடையில் மாநகர பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி உட்பட பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. மேலும் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இயக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காரனோடை பேருந்து நிலையம் இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகளின் நலனுக்காக நிறுத்தப்பட்ட பேருந்துகளின் சேவையை உடனே தொடங்கிட வேண்டும் என கேட்டு கொண்டனர். பள்ளி, வங்கிகள், பஜார் என மாணவிகள், பெண்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தேர்தலின் போது மட்டுமே வந்து வாக்குகளை கேட்பதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என சாடினர். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கதையினை விரைந்து அகற்றிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu