திருவள்ளூரில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்:பரிசு வழங்கல்

திருவள்ளூரில் கலைஞர் நூற்றாண்டு   விழா கருத்தரங்கம்:பரிசு வழங்கல்
X

திருவள்ளூரில் நடந்த கலைஞர் நுாற்றாண்டு கருத்தரங்கில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Kalaignar Centenary Seminar திருவள்ளூரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Kalaignar Centenary Seminar

திருவள்ளூர் அருகே கலைஞர் நூற்றாண்டு விழா சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம்மானது

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு முழுவதும் அனைத்துமாவட்டங்களிலுள்ள 100 பள்ளிகள் மற்றும் 100 கல்லூரிகளில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் சட்டமன்றத்தின் மூலம்டாக்டர் கலைஞர் அவர்கள் சமூக முன்னேற்றத்திற்காக ஆற்றிய சாதனைகளை பற்றி கல்லூரி மாணவர், பள்ளி மாணவர்கள் இடையே கருத்தரங்கம் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு தொடர்ச்சியாகதிருவள்ளூர் மாவட்டம்,பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுவிழாவையொட்டி சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு டாக்டர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்தும்மக்களுக்காக அவர் ஆற்றிய மாபெரும் பணிகளை குறித்தும் முக்கியமாக சமூகத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்குகைப்பெண் என்று பெயரை உருவாக்கி கொடுத்த பெருமை டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பெருமை சேரும் என்றும் ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளி என்று பெயரை சூடியவர் முத்தமிழ் கலைஞர் என்று மாணவர்கள் பெருமிதம் கொண்டு பேசினர்.

மேலும் இந்தப் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டமாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

இதில்இணை செயலாளர் சாந்தி பாண்டியன்,துணை செயலாளர்கள் எஸ்.பாலகிருஷ்ணன், சுஜாதா (சட்டசபை செயலகம்), முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business