கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
X

கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் ஒரு மாணவருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.

கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் தற்போது படிக்கின்ற மாணவனுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் பயின்றுவரும் தாய் தந்தையை இழந்த 40 மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சீருடை வழங்கி உதவி.

திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2012 - 2013 ம் ஆண்டு +2 படித்து முடித்து பத்தாண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் பழைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு ஆசிரியர்களின் பணி எவ்வாறு இருந்தது என மாணவ,மாணவிகள் பகிரந்து கொண்டனர். சில மாணவர்கள் நினைவுகளை பகிர்ந்தபோது கண்கலங்கியபடி உரையாடினர். ஆசிரியர்கள் எங்களை கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால் நாங்கள் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என பெருமையோடு தெரிவித்தனர்.

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை பெருமையின் அடையாளம் என்பதற்கு நாங்கள் சாட்சி என்றனர். இவ்விழாவில் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவ, மாணவிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து தற்போது பயிலும் தாய் தந்தையரை இழந்த ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மாணவர்கள் 40பேருக்கு சீருடை வழங்கி பேருதவி செய்தனர். இதில் 150 முன்னாள் மணவர்கள் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்னதாக +2 முடித்து 10 ஆண்டுகள் ஆனதை நினைவுப்படுத்தும் வகையில் கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியை சுப்புலட்சுமி 10 கிலோ கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஓவிய ஆசிரியரும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?