சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த முனுசாமி.
Jumping From The Floor Patient Died
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயில் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(வயது 55) இவர் அரண்வாயில் பகுதியில் உள்ள பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தினக்கூலியாக பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளர்.சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி செவிலியர்கள் அவருடைய கை கால்களை படுக்கையில் கட்டி போட்டு வைத்திருந்தாக தெரிகிறது.இந்த நிலையில், இவர் இன்று காலையில் திடீரென முதலாவது மாடியில் இருந்து குதித்து ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கும் இடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.இதில் முனுசாமிக்கு தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அங்கேயே அனுப்பி வைத்தனர்.உயிரிழந்த முனுசாமிக்கு நாகபூஷணம் என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu