திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டை கதவை உடைத்து தங்க நகை கொள்ளை

திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டை கதவை உடைத்து தங்க நகை கொள்ளை
X
திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர் பெரியகுப்பம் கற்குழாய் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி(56). இவர் கடந்த மாதம் 23ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இதனிடையே, மணவாள நகர் பகுதியில் வசிக்கும் லட்சுமியின் மகள் மாலினி, நேரம் இருக்கும் போது வீட்டிற்கே சென்று பார்த்து வருவார். அதன்படி, நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்திருந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று மாலினி பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.7.1/2 லட்சம் மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு, மாலினி தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து, வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story