விவசாயி வீட்டில் 15 சவரன் நகைகள், ரூ. 1.5 லட்சம் ரொக்கம் திருட்டு

Theni News Today | Robbery Case
X
வரதாபுரம் பகுதியில் விவசாயி வீட்டில் 15 சவரன் நகைகள் மற்றும் ரூ. 1.5லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், வரதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயியான இவர் இன்று காலை வயல் வேலைக்கு சென்று மாலை வீட்டுக்கு திரும்பியபோது, கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 1.5 லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கோபால் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் அராஜகம் – வடமாநில இளைஞர் மீது பொதுமக்கள் ஆத்திரம் - ஈரோட்டில் பரபரப்பு!