கும்மிடிப்பூண்டி ஊழியர் வீட்டில் 13 சவரன் தங்க நகை, ரொக்கம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி ஊழியர் வீட்டில் 13 சவரன் தங்க நகை,  ரொக்கம் கொள்ளை
X
 நகை கொள்ளையடிக்கப்பட்ட பீரோ.
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் ,12 சவரன் தங்க நகை, ரொக்கம் கொள்ளை போனது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லா குப்பம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் வெங்கடேசலு வயது, 30, மனைவி பிரியா 29 ஆகியோர் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றனர்.

வெங்கடேசலுவின் தாயார் அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்று திரும்புவதற்குள், இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் அருகே மறைவிடத்தில் வைத்து இருந்த சாவியை எடுத்து, பூட்டைத் திறந்து, பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகை, =13 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!