‘ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது கண்ணீர் வந்தது’- திருநாவுக்கரசர் எம்.பி.
திருநாவுக்கரசர் எம்.பி.
வியாதிக்கு முதல்வரா, பிரதமரா என தெரியாது, தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்த போது வீடியோ வந்தது.முதலமைச்சராக இருந்தாலும் நோய்வாய் பட்டு மருத்துவ மனையில் பட்ட கஷ்டங்கள், அவதிகளை பார்க்கும் போது கண்ணீர் வரும் என காங்கிரசின் திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஒரக்காடு பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு செவிலியர்கள் விளக்கேற்றி உறுதியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி 1000 பேருக்கு 3 செவிலியர்கள் இருக்க வேண்டும், ஆனால் இந்தியாவில் 2 பேருக்கும் குறைவாக உள்ளனர் எனவும், இந்தியாவில் 4.4 மில்லியன் செவிலியர் இருக்க வேண்டும் அதவாது 50 லட்சம் பேர் இருக்க வேண்டும். ஆனால் 35 லட்சம் செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் செவிலியர் பற்றாக்குறை உள்ளது.
அரசும், தனியாரும் அதிக சம்பளம் தர வேண்டும்,அதனால் தான் படித்து விட்டு வெளிநாடு செல்கின்றனர். இந்தியாவில் உள்ள செவிலியர்களுக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் 2 விஷயங்கள் அதிகம்.
ஒன்று ஓட்டல்,இரண்டாவது மருத்துவ மனை. இயேசு கிறிஸ்து இறுதி நாளில் நான் பசியோடு இருந்தேன், தாகத்தோடு இருந்தேன்.மருத்துவ மனையில் நோயுற்று இருந்தேன் என்னை பார்க்க வந்தீர்கள் என கூறினார். மருத்துவ மனையில் இருப்பது கஷ்டமான காரியம், அதை பார்ப்பது புனிதமானது என இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்த போது வீடியோ வந்தது.முதலமைச்சராக இருந்தாலும் நோய்வாய்ப் பட்டு மருத்துவ மனையில் பட்ட கஷ்டங்கள், அவதிகளை பார்க்கும் போது கண்ணீர் வரும். வியாதிக்கு முதல் மந்திரியா, பிரதமரா என தெரியாது,வயதும் தெரியாது குழந்தை மாதிரியான நோயாளியை தாய் போல் பாதுகாக்க வேண்டும். நோயாளிகளை குணப்படுத்துவது ஒன்று மருந்து, மற்றொன்று செவிலியரின் சிரிப்பு.சிரிக்கும் போது கூட்டத்தோடு சிரியுங்கள், அழும் போது தனியாக அழுங்கள். எல்லாரையும் சிரிக்க வைத்து மருத்துவம் பாருங்கள் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu