புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அரசியலை சீர்படுத்துவதற்கு மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த ஆண்டரசன் பேட்டையில் அவருடைய இல்லத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவர் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது . பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் நேரடியாக வந்து ஜெகன் மூர்த்திக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கி அவருடைய இல்லத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து பிறந்த நாளை கொண்டாடினார்கள். அப்பொழுது புரட்சி பாரதம் கட்சியின் நிறுவன தலைவர் மூர்த்தியின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் போது புரட்சி பாரதம் கட்சியின் முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், மாநில நிர்வாகிகள்பூங்காநகர் காமராஜ் முல்லை பலராமன், கூடப்பாக்கம் குட்டி, பரனிமாரி, மதிவாசன், ரகுநாத், ஸ்ரீதர், சரவணன், சித்துக்காடு ஏகாம்பரம் முத்துராமன் ராக்கெட் ரமேஷ் மற்றும் தனிகையார் வரதராஜ், லோகு, செந்தில்குமார், வழக்கறிஞர் ஸ்ரீதர். ஆகியோர் மாலைய அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதை தொடர்ந்து ஜெகன் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தது கிட்டத்தட்ட 98 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார் என்று ஊடகங்கள் மூலமாக பார்த்தோம் அதே நேரத்தில் மாணவர்களும் மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் படிப்பதற்காக மாணவர்கள் நிறைய மாணவர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டு உள்ளார்கள் ஒவ்வொரு கல்லூரிகளிலும் பி .காம் படிப்பதற்காக மாணவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வும் எழுதி இருக்கிறார்கள் இந்த முறை வெற்றி பெறுவார்கள் என்று அதிகமாக மதிப்பெண் பெறுவார்கள் என்று ஒரு சூழ்நிலை உள்ளது நாம் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லுகிறோம் ஆனால் மாணவர்கள் நீட் தேர்வில் மாணவர்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்கிற சூழ்நிலை உருவாகி வருகிறது. வட மாநிலங்களில் தான் நீட் தேர்வு வேண்டுமென்று கேட்கிறார்கள் தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று நாம் எதிர்த்து கொண்டு இருந்தாலும் ஆனால் இந்தியாவில் தான் தமிழ்நாட்டில் தான் மாணவர்கள் அதிகமாக கலந்து கொள்வதும் அதிகமாக மார்க் எடுப்பதும் உள்ளது இன்றைக்கு பன்னிரண்டாம் வகுப்பில் 98 சதவீதம் வெற்றி பெற்று மாணவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டு சதவீதம் தான் தோல்வியை தழுவி இருக்கிறார்கள் மீண்டும் அவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஜூன் மாதம் தேர்வு துறை அவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தோல்வி பெற்றவர்களின் மீண்டும் வெற்றி பெற்று தாங்கள் தேர்வு செய்கின்ற கல்லூரிகளிலே அல்லது பாடப்பிரிவிலே சேர்ந்து படித்து ஒரு நல்ல நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை அல்லது அவர்கள் எதிர்பார்க்கின்றார்களே பெரிய பதவிகளிலே போவதற்கான அரசியலை சீர்படுத்துவதற்காக மாணவர்கள் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். உலக அளவிலே மாணவர்கள் இந்தியாவை தலை நிமிர செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu