ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே மனிதர்களை நரபலி கொடுக்க திட்டமா?
ஊத்துக்கோட்டை அருகே தோண்டப்பட்ட மரண குழி.
ஆந்திரா ஒட்டிய தமிழக எல்லை காட்டுப்பகுதியில் பௌர்ணமி தினத்தையொட்டி மனிதர்களை நரபலி கொடுக்கும் வகையில் தோண்டப்பட்டுள்ள மூன்று மர்ம குழிகளை கண்டு கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அல்லிக்குழி மலைத்தொடரை ஒட்டிய ஆந்திரா எல்லை பகுதியில் உள்ளது தமிழக கிராமமான பிளேஸ் பாளையம்.
அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி இமானுவேல் என்பவர் கடந்த 21 ந் தேதி திங்கட்கிழமை அன்று மாலை தனது வீட்டு தேவைக்காக காட்டுப் பகுதியில் காய்ந்த விறகு வெட்டி சேகரித்து வந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் மாந்திரீகம் செய்யப்பட்டு மர்ம குழி தோண்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காட்டின் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளரான சீமோன் என்பவருக்கு தகவல் கூறி உள்ளார்.
அதைத் தொடர்ந்து சீமோன் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணியளவில் தன்னந்தனியாக அந்த மர்மக் குழியை பார்க்க சென்றுள்ளார். அப்போது முகத்தில் தாடி நிறைந்த மர்ம நபர் மூன்று பேர் முழங்காலிட்டு கண்களை மூடிக்கொண்டு மந்திரித்துக் கொண்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு செல்போன் மூலமாக தகவல் கூறி அவர்களை அழைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்கள் பெரியவர்கள் செல்போன் டார்ச் லைட் உடன் அங்கு வந்ததால் மக்கள் வருவதை கண்டு மர்ம நபர்கள் 5 பேர் அங்கிருந்து தப்பித்து சிவப்பு நிற காரில் தப்பி உள்ளனர். அதைத் தொடர்ந்து அங்கு சென்ற இளைஞர்கள் காட்டுப்பகுதியில் சுற்றி பார்த்துள்ளனர்.
அப்போது மூன்று இடங்களில் மனிதனை நரபலி கொடுக்கும் வகையில் 12 அடி உயரும் மூன்று அடி அகலம் வகையில் மனிதர்களை நிற்க வைத்து நரபலி கொடுக்கும் வகையில் இரண்டு புதைகுழிகளும் 6 க்கு 3 அடி கொண்ட படுக்க வைத்து நரபலி கொடுக்கும் வகையில் ஒரு புதைகுழியும் தோண்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்த புதைக்குழியில் மனித எலும்பு துண்டு போடப்பட்டு அந்த குழி சுற்றி ஆணிகள் அடிக்கப்பட்டு சிகப்பு நிற துணி கிழித்து அதன் மீது எலுமிச்சை பழம் மாந்திரீகம் செய்தும் குங்குமம் தொளிக்கப்பட்டும் பால் தயிர் எண்ணெய் போன்ற பொருட்கள் அங்கு இருந்தது கண்டுபிடித்தனர்.
கிராமத்தின் ஒதுக்குப்புறமாக நரபலி கொடுக்கும் புதைக்குழி தோண்டப்பட்டு இருப்பதை செய்தி அறிந்த கிராம மக்கள் பீதி அடைந்ததால் கிராம இளைஞர்கள் கத்தி கம்பு கல் போன்ற ஆயுதங்கள் உடன் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு பகலாக காட்டுப்பகுதியில் முகாமிட்டு புதைக்குழியை பாதுகாத்து வந்தனர்.
இதனால் வழக்கமாக கிராமத்தில் இரவு 12 மணி அளவில் கண்விழித்து உறங்க செல்லும் மக்கள் இச்சம்பவத்தால் மாலை 6:00 மணிக்கே அனைத்து வீடுகளிலும் கதவுகள் அடைக்கப்பட்டு வீட்டில் முடங்கி வருகின்றனர்.
புதைக்குழியை பார்த்த இமானுவேல் என்பவர் அதிர்ச்சி அடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மனிதர்களை நரபலி கொடுக்க குழி தோண்டி புதைக்க இருந்த சம்பவம் அப்பகுதி இளைஞர்கள் இரவில் புதைக்குழிக்கு பாதுகாத்து தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
யாரை அழைத்து வந்து நரபலி கொடுக்க குழி தோண்டப்பட்டது தப்பி ஓடியவர்கள் யார் அவர்களை கண்டறிந்து கைது செய்து தங்களுக்கு பீதியில் இருந்து பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu