திருவள்ளூரில் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

திருவள்ளூரில் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்
X

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்.

திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவருமான துரை சந்திரசேகர் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் பேசுகையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வாக்குகளை பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்காக ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் அயராமல் களப்பணி ஆற்றிட வேண்டும் என்றும் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளின் வீட்டிற்கு முன்பாக10 நாட்களுக்குள் காங்கிரஸ் கொடி கட்டாயமாக ஏற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் வடக்கு மாவட்டத்திற்கு புதிய ‌ நிர்வாகிகளான மாவட்டத் துணைத் தலைவர் மாவட்ட பொது செயலாளர் மாவட்ட செயலாளர் வட்டார தலைவர்கள் பேரூராட்சி தலைவர்கள் என 216 புதிய கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு‌ சான்றுகள் வழங்கப்பட்டது.

இதில் மாநிலத் தலைவர் அஸ்வின்குமார் மாவட்ட பொருளாளர் மணவாளன், மாநிலத் துணைத் தலைவர்கள் ஏகாட்டூர் ஆனந்தன், சதாசிவம், மாநில செயலாளர்கள், கருணாநிதி, சம்பத் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story