5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

5 வயதிற்கு உட்பட்ட  குழந்தைகளுக்கான தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
X

 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை பூவிருந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி

புலியூர் கிராமத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை பூவிருந்தமல்லி எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம். புலியூர் கிராமத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் 12.6.2023 முதல் தொடங்கி 25.6.2023 வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெற உள்ளது .

முகாமில் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கும் பொருட்டு ஓ. ஆர்.எஸ். உப்பு சக்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

இம்முகாமில் 1.355 அங்கன்வாடி பணியாளர்களுக்கு சுகாதாரத் துறை சார்ந்த 632 பணியாளர்களும் மொத்தம் 1987 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக வழங்கப்பட உள்ளது.

தற்போது இம்முகாமிற்காக 2,11,735 ஓ ஆர் எஸ் உப்பு சர்க்கரை கரைசல் துத்தநாக மாத்திரைகளும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும். இருப்பு உள்ளது

முதல் வாரத்தில் 12. 6. 2023 முதல் 18.6.2023 வரை ஒவ்வொரு அங்கன்வாடி பணியாளரும் 5.வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஓ ஆர் எஸ் கரைசலில் விநியோகிக்க வேண்டும்

இரண்டாவது வாரம் 19/6/2023 முதல் 25.6.2023 வரை குழந்தைகளின் எடை கண்காணிக்கவும் குறைவான எடையுள்ள குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்யவும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் வீடு வீடாக சென்று பார்வையிட வேண்டும் .

திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள முகாமில் சிறப்பாயப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் உப்பு,சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார்.

மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு தடுக்க முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்யேகமாக தாய்ப்பால் கொடுத்தல் சுத்தமான குடிநீர் பருகுதல் உணவு சமைப்பதற்கு முன்பு குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்கு முன்பும் மலம் கழித்த பின்னரும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும் வயிற்றுப்போக்கின் போது உணவுடன் ஓஆர்எஸ் மற்றும் துத்தநாக மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைக்கலாம் எனவும் கூறினார்.

தொடர்ந்து முகாமில் ஓ ஆர் எஸ், மற்றும் ஜிங்க் கண்காட்சி புறநோயாளிகள் பகுதி குழந்தைகள் நலப் பகுதிகளின் நிறுவுதல் அவசியம் என்றும் மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை, முகப்புகள் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் தனியார் மருத்துவமனைகளிலும் கண்காட்சி எளிதில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் சுகாதார மாவட்டம் துணை இயக்குனர் சுகாதார பணிகள் ஜவகர்லால், மருத்துவர் கார்த்திகேயன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர். மாவட்ட தாய் சேய் நல அலுவலர் திருமதி தேவி ஸ்ரீ, மாவட்ட பயிற்சி குழு மருத்துவர் தீபலட்சுமி, மாவட்ட நலக் கல்வியாளர் கணேசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திர போஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அந்தோணி, புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் குட்டி பக்தவச்சலம், ஒன்றிய கவுன்சிலர் ராஜு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!