குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
X

தீவிர சோதனையில் ஈடுபடும் ரயில்வே போலீசார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் 30க்கும் மேற்பட்டோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் பெரம்பூர் ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோரால் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அவர்கள் கொண்டுவரும் பைகளை தீவிர சோதனை செய்து ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் ரயிலில் வரும் பயணிகளிடம் தீவிர சோதனை செய்த பின்னரே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் ஏகாட்டூர் கடம்பத்தூர் செஞ்சி பணம்பக்கம் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்