களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வலியுறுத்தல்
விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்.
வருகிற 31-ந்தேதி விநாயகர் சதூர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது அது எளிதில் கரையக் கூடியதாக இருக்க வேண்டும். இரசாயணம் கலந்திடாமல் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளியின் ஈகோ கிளப் மாணவர்களின் இயற்கையான களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளிக்குழுமம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளி தாளாளர் விஷ்ணுசரன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் 350 பேரும், ஆசிரியர்கள் 50 பேரும் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியை பள்ளி முதல்வர் டாக்டர் ஸ்டெல்லா ஜோசப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மீரா திரையரங்கத்திலிருந்து காமராசர் சிலை வரை நடைபெற்ற இந்த பேரணியின் போது இயற்கையான முறையில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த பதாகைகளை மற்றும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டபடி சென்றனர்.
மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஈகோ கிளப் ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா ஒருங்கிணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு பேரணி முடிவில் பள்ளியின் துணை முதல்வர் கவிதா கந்தசாமி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் பத்மாவதி மற்றும் டாக்டர் ஷாலின் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu