திருக்கண்டலம் ஊராட்சி அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருக்கண்டலம் ஊராட்சி அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
X

திருக்கண்டலூர் அரசு பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Independence Day Celebration at Tirukandalam Panchayat Government School

திருக்கண்டலம் ஊராட்சி அரசு பள்ளியில் 77ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல்3. இடங்களை பிடித்த மாணவிகளுக்கு தங்க காசு பரிசு வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி 6 ஆம் வகுப்பு முதல்10 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் திருக்கண்டலம் சுற்றியுள்ள பூரிவாக்கம், தண்டு மேடு, நெய்வேலி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 480.மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று 77ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு தங்க காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திருக்கண்டலம் கிராமத்தைச் சார்ந்த ஹேமஜோதி என்ற மாணவி 461 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் இடம் பிடித்தார்.அதேபோல் பூரிவாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரியங்கா என்கிற மாணவி 459 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்தார். திருக்கண்டலம் ஊராட்சி மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியவாணி என்கின்ற மாணவி455 மதிப்பெண்களை எடுத்து மூன்றாம் இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் ஏற்பாட்டில் அவரது சொந்த நிதியில் தங்க காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷாமிலி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.கே. ராமச்சந்திரன்,ஒன்றிய குழு உறுப்பினர் ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆ.சத்திய வேலு கலந்துகொண்டு மாணவி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி பின்னர் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ஹேமஜோதிக்கு 4.கிராம் தங்கம் காசும், இரண்டாம் இடம் பிடித்த பிரியங்காவிற்கு2.கிராம் தங்க காசும், 3.ஆம் இடம் பிடித்த மாணவி சத்தியவாணிக்கு 1.கிராம் காசை வழங்கி பாராட்டி பேசினார். இதில் பள்ளியில் மேலாண்மை குழு தலைவர் ஸ்ரீமதி, ஆசிரியர்கள் மணி, ரோசா,வாசுகி,கோமதி, நதியா மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai and future cities