திருவள்ளூர் அருகே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பெயர் பலகை திறப்பு

திருவள்ளூர் அருகே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பெயர் பலகை திறப்பு
X

திருவள்ளூர் அருகே விஜய்  மக்கள் இயக்க மகளிர் அணி பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.

திருவள்ளூர் அருகே ஈக்காடு பகுதியில் விஜய் மக்கள் மகளிர் அணி பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பெயர் பலகையை மாவட்ட தலைவர் திறந்து வைத்தார். இதில் திரளான மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தலின் பெயரில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின் அடிப்படையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் குட்டி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஏழை எளியவருக்கு இலவச உணவினை வழங்கி வருகிறார்.

மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை ஒன்று சேர்த்து இயக்கத்தில் உறுப்பினர்களை அதிகப்படியாக சேர்க்கும் நடவடிக்கையையும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி ஈடுபட்டு வருகிறார்.

இதனை முன்னிட்டு திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு ஊராட்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளின் பெயர் பலகையை மாவட்ட தலைவர் திறந்து வைத்தார்.மேலும் பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களான பேனா பென்சில் நோட்டு உள்ளிட்ட பொருட்களும், குடும்ப பெண்களுக்கு பால் வகைகளையும் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஒன்றிய நகர கிளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது இதுபோன்ற உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வாரம் 2 முறை.. வயிற்றை சுத்தம் செய்ய இந்த இலைய சாப்டுங்க!..