திருவள்ளூரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருவள்ளூரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X

பைல் படம்.

திருவள்ளூரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியில் வசித்து வருபவர் அசோக்(34) இவர் பூச்செடிகள் காய்கறி செடிகள் உள்ளிட்டவை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி திலகவதி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

திலகவதி அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவம் தன்று அசோக் வியாபாரத்திற்கு போன பின்னர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு திலகவதி வேலைக்கு சென்றுள்ளார்.

பிற்பகல் அசோக் வீட்டிற்கு தனது தாயார் ஜமுனா வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தன் மகனுக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு விரைந்து வந்து பார்த்த அசோக்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 11 சவரன் தங்க நகை ரூபாய் 90 ஆயிரம் ரொக்க பணத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து அசோக் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் வியாபாரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை மட்டும் பணம் கொள்ளையடித்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story