திருவள்ளூரில் 29ம் தேதி 792 பேருக்கு கொரோனா 7 பேர் பலி

திருவள்ளூரில் 29ம் தேதி 792 பேருக்கு கொரோனா 7 பேர் பலி
X
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் டிஸ்சார்ஜ் 770 என மாவட்ட நிர்வாகம் தகவல்.தெரிவித்துள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில் சில தினங்களாகவே கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் 792 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 770 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இன்று கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

மாவட்டத்தில் இன்று கொரோனாவின் காரணமாக மருத்துவ மனை மற்றும் வீடுகளின் தனிமைப்படுத்துதல் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5510 ஆக உள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 58, 801 ஆகவும், இதில் 52, 505 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 786 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags

Next Story
ai as the future