திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 108 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தின் இன்று கொரோனாவின் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 748 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,416 ஆகும், இதில் 44,955 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 713 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்