திருவள்ளூர் மாவட்டத்தில்இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில்இன்று    டிஎன்பிஎஸ்சி  குரூப்-4  தேர்வு
X
தமிழகம் முழுவதும்இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடக்கிறது. திருவள்ளூர் மாவட்ட மையங்களிலும் இன்று தேர்வு நடக்கிறது.


திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், , கும்மிடிப்பூண்டி, ஆவடி பள்ளிப்பட்டு, பொன்னேரி, பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 195 மையங்களில் (குரூப் 4) தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 60,305 நபர்கள் பங்கேற்க உள்ளனர்.குரூப் 4 தேர்வு இன்று காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவுரையின்படி தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தவறாமல் தேர்வு மையங்களுக்கு வருகை புரிந்திட வேண்டும். அதற்கு மேல் வருகை புரியும் தேர்வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக திருத்தணி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு செல்ல 2 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களது நுழைவு சீட்டினை காண்பித்து தடையில்லாமல் தேர்வு மையங்களுக்கு செல்லலாம். திருத்தணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்லும் தேர்வர்கள் ஆடிக் கிருத்திகை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலதாமதம் ஏதுமின்றி காலை 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் என திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்