கொலை வழக்கில் சரண் அடைய வந்தவரை தீர்த்து கட்டிய 4 பேர் கைது

Murder Case | Murder Case News
X
Murder Case - திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் சரண் அடைய வந்தவரை தீர்த்து கட்டிய 4 பேர் கைது

Murder Case - திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிக்கலை, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் வேலு.(30).வெல்டரான வேலு கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது நண்பர்கள் செல்வா (26), கோகுல், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேரும் செவ்வாப்பேட்டை அடுத்த சிறுகடல் டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக சென்றனர். டாஸ்மாக் கடைக்கு பின்புறம் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது சைடிஷ் வாங்குவதில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது குடிபோதையில் வேலுவின் நண்பனான செல்வா என்பவர் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவின் கழுத்து வயிறு, கை, கால் என சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வேலு துடிதுடித்து உயிரிழந்தார். செவ்வாபேட்டை போலீசார் வேலு கொலை குறித்து வழக்கு பதிவு செய்து கொலை செய்தவர்களை பிடிக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் செவ்வாப்பேட்டை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை மடக்கி சோதனை செய்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதில் சந்தேகம் அடைந்த செவ்வாப்பேட்டை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சிறு கடல் அருகே டாஸ்மாக் கடை அருகே வேலுவை கத்தியால் வெட்டிக் கொலை செய்த செல்வா மற்றும் ஸ்டாலின் என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வா மற்றும் ஸ்டாலினை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வேலுவை குடிபோதையில் கொலை செய்ததையடுத்து திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் கோகுல்(21) என்பவர் மட்டும் காவல் நிலையத்தில் சரண் அடைய வந்துள்ளார். அப்போது வேலுவின் நண்பர்கள் சிலர் கோகுலை தாக்கி அழைத்துச் சென்றதாக காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் கோகுலை தேடி வந்துள்ளனர். செவ்வாப்பேட்டையை அடுத்த தொட்டிகலை பொன்னியம்மன் கோயில் அருகில் கிருஷ்ணா வாட்டர் கால்வாய் அருகில் உள்ள நிலத்தில் தலையில் பலத்த காயங்களுடன் கோகுல் சடலமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் கோகுல் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வேலுவை கொலை செய்ததை அறிந்த அவரது நண்பர்கள் அயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுனில், சதிஷ் ,வெங்கடேசன் 4 பேரும் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைய வந்த போது தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துணை ஆணையர் பெருமாள், பூந்தமல்லி சரக உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் 4 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!