பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம்

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர்
திருவள்ளூரில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் முன்னேறம் அடைந்து 5-வது இடத்தை பிடித்தது என பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் தெரிவித்தார்.
பாரதப் பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த நிலையில் 9 ஆண்டுகள் மக்களுக்கு செய்த மத்திய அரசு நலத்திட்டங்கள் குறித்தும் 9 ஆண்டுகள் சாதனைகள் குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் என்கிற ராஜசிம்ம மகேந்திரா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் பேசினார். பாரதப் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து 10-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு நியாயமான விலை, உரம் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 6 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள 50 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி டிஜிட்டல் முறையை வேகப்படுத்தியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 11.72 கோடி குடும்பங்களுகு இலவச கழிவறை கட்டித் தரப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 9.20 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றால் அவதிப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பிய அரசு மோடி அரசுதான் . மோடி பிரதமாக பதவியேற்பதற்கு முன் 7 மருத்துவக் கல்லூரி மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது 15 மருத்துவக் கல்லூரிகள் கூடுதலாக கட்டப்பட்டுள்ளதாக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் தெரிவித்தார்.
இதில், அரசு தொடர்பு துறை மாநில தலைவர் எம்.பாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அருண் சுப்பிரமணியம், காயத்ரி தேவி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் இரா.கருணாகரன், ஆர்யா சீனிவாசன் மற்றும் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu